எம்மை பற்றி

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உதவியுடன் சைகை மொழியை கற்பிப்பதற்கான இந்த செயற்திட்டம் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் (ICTA) நிதியுதவியுடன் இன்போலியூம் (Infolume) என்ற தனியார் நிறுவனத்தால் நிறைவேற்றபட்டுள்ளது.

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (ICTA)‚ இலங்கையில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் நோக்கத்துடன் இலங்கை அரசாங்கத்தால் நிறுவப்பட்ட நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் ந-சமூகம் என்ற திட்டத்தை முன்னெடுத்து நாட்டின் மிகவும் பின்தங்கிய மற்றும் பலவீனமான சமூகத்தினருக்கு தகவல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தவும் அதை அவர்கள் உபயோகிக்கவும் வழிசெய்கிறது.

இன்போலியூம் (தனியார்) நிறுவனம் (Infolume) புதுமையான தீர்வுகளை வேறுபட்ட தேவைகள் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் ஒரு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். நாங்கள் 1998ஆம் ஆண்டில் இருந்து எமது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். இந்த காலத்தில் தகவல் தொடர்பாடல் சம்பந்தமான செயற்திட்டங்களை பல நிறுவனங்களிலும் தனியார் அமைப்புக்களிலும் எடுத்துசெல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது. எமது அறிவு சம்பந்தமான மதிப்புள்ள சொத்துக்களின் மூலங்களை தகவல் தொழில்நுட்பத்தின் ஒத்துழைப்புடன் அடக்கி உபயோகிப்பதன் மூலம் செல்வம் தேடும் வாய்ப்புகளை எமது வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதே எமது நோக்கம் ஆகும்.

பிறைஸ் வாடர் ஹவுஸ் கூபேர்ஸ்(Price water House Coopers) எனும் நிறுவனம் இச்செயற்திட்டத்தின் செயற்பாட்டு நிபுணராகும். இது உலகத்திலே வளர்ந்து வரும் ஒரு பிரபலமான கணக்குச் சேவை அமைப்பாகும். இந்நிறுவனமானது பொது வாடிக்கையாளர்களுக்கும், தனிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கும் தொழில் ரீதியான சேவைகளை வழங்குவதன் மூலம் பொதுமக்களிடையே நம்பிக்கையை வளர்ப்பதுடன் தொடர்புபடுத்தப்பட்ட சிந்தித்தலின் பிரயோகத்தின் பெறுமதியையும் அதிகரிக்கிறது.

Copyright © 2017 ICTA & Computerland International (Pvt) Ltd. All rights reserved